1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க....?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க...?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க...?
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்) ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி) ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள். அது உங்களுக்குதிரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்” -பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ். இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.
ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்ய தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும் குத்திக்காட்டும். ஏதாவது செய்.
நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம் நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம் இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம் எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.
உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம். ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்? -முள்முடியில் தி.ஜானகிராமன்
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
நேற்று ஏதோ ஒரு போய் சொல்லி நீ சிறுக சிறுக சேமித்து வைத்ததை மொத்தமாய் பிடுங்கி போய் தண்ணி அடித்த சுகம்
இப்போது
நினைத்தால் மதுகடையே வாங்கும் தகுதி இருந்தும் முடியவில்லை சுத்தமாய் !!!
அவசர தேவைக்கு நான் நிற்கும் வங்கி காதலுடன் நீ கழற்றி தரும் உன் நகைகள்!!!!!!!!! நேற்று அருவருப்பாய் நான் வாழ்ந்த பொழுது முழு காதலுடன் என் பக்கம் இருந்தாய்........................
இப்போது அர்ததமாய் வாழ்கிறேன் முடிந்த வரையில் நீயும் இல்லை! காதலும் இல்லை!!
என்னதான் ஜெயித்தாலும் உன்னை விட்ட பிறகு தான் உருப்பட்டேன் என்று இந்த குருட்டு உலகம் சொல்வதில் வலிக்கிறது மொததமாய் !!!!!!!!!!
யாருக்கு தெரியும் என்னை பெற்றவள் தாயென்றாலும் ஆளாக்கியவள் நீயென்பது ...................
புதிதாய் வாங்கிய கேமராவில் முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென நீ கேட்டுக்கொண்ட போதும், நான் படமெடுத்தது உன் நிழலை.
என் பிறந்தநாளுக்கு, கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது உன் கைக்குட்டையை.
இயற்கை பின்புலங்களில் எடுத்த உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும் எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும் அந்த பழைய படத்தை.
‘நான்’ எனும் தலைப்போடு என்னறைச் சுவரில் தொங்கும் உன் நிழல் (படம்)…
என் கவிதைகளில் உனக்கு மிகப் பிடித்ததொன்றை பூத்தையலில் இழைத்து வைத்த அந்த வெள்ளை கைக்குட்டை…
உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…
இவற்றில் எதனை பரிசென தருவது? நாளைய உன் திருமணத்திற்கு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நல்லா மூக்குமுட்ட சாப்டு மொய் எழுதாம ஓடிவந்துடலாம் மாமு......
முற்றுப்புள்ளிகளற்ற மெளனம் ஒன்று நாள் முழுக்க நீண்டபடியேயிருந்தது முடிவற்று...
உன் வெற்றிடங்களை எப்போதும் நிரப்பிக் கொண்டிருப்பதாய் உன்னால் சிலாகிகக்கப்பட்ட என் சொற்களும் கூட இலக்கற்று அலைந்து மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி உடைந்து திரும்பின..
உரக்கச் சத்தமிட்டு ஓடித்திரியும் பிள்ளைகளாய் என்னைச் சுற்றிவந்த நினைவுகள் சிலவற்றில் உன் பெயருமிருந்தது.
ஒருவேளை...
உன் பெயர் சொல்லிக்கொண்டு துண்டு மேகமொன்றோ சிட்டுக்குருவியொன்றோ வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஜன்னல்களினூடே நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன் வெகுநேரம்...
தொலைவில்... வானம் முடியும் ஒரு புள்ளியில் நொடிக்கொரு வண்ணம் காட்டி பிரித்தறிய முடியா நிறங்களை என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே
மிச்சங்கள் ஏதுமின்றி மறைந்துபோனது பகல் உன்னைப் போலவே...
புன்னகை செய் தப்பில்லை. ஆனால் நான் சாலை கடக்கும் போது வேண்டாமே, கால்களுக்குக் கட்டளையிட மறந்து மூர்ச்சையாகிறது மூளை.
ஒவ்வொரு பாராட்டிலும் கன்னம் சிவக்கும் என் கவிதை, உன் வெட்கத்தின் முன் மட்டும் வெட்கித் தலை குனிக்கிறது.
உனைப்பார்க்கும் வரம் கொடு கவிதை படிப்பதை கிடப்பில் போடுகிறேன். உன்னுடன் பேசும் வரம் கொடு இசைப்பேழையை இருட்டில் வைக்கிறேன். உன் விரல் தீண்டும் வரம் கொடு ஓவியம் வரைவதை ஒத்தி வைக்கிறேன். நீயோ, என் தவத்தை ரசிப்பதற்காகவே வரம் தர மறுக்கிறாய்.
எந்த ஆடை அழகென கேட்கிறாய், எந்த பூ எனக்கழகென்று வண்ணத்துப் பூச்சி கேட்பதாய்ப் படுகிறது எனக்கு.
உனக்குப் பிடித்த ஆடையின் வண்ணம் கருப்பு என்று தோழி சொன்னாள். என்கிறப்போது முகம் பார்க்கும் கண்ணாடி முக்கியமில்லாமல் போய்விட்டது
"அவள்!..திட்டிவிட்டு... சென்றால் கூட!.... சிரித்து கொண்டு இருந்திருப்பேன்!.... ஆனால்,அவளோ!... சிரித்து விட்டு போய் விட்டாள்!... அதான்,இன்னும், 'சிந்தித்து' கொண்டுருக்கிறேன்"....
உன் ஓர விழி பார்வையில் என் உயிர் உருகி போனது...., உன் கை பிடித்து நடக்க காலமெல்லாம் காத்திருக்க தோன்றியது..... நீ உண்ணும் அழகை நான் ரசிக்க என் பசியே ம(றை)றந்து போனது, நீ உண்ணும் உணவாய் நான் மாற தோன்றியது...., உன் கண் என்னும் கணையால் என் மனதை தாக்கினாய்,,,, உன் புன்னகையால் என் புண்பட்ட நெஞ்சமும் புகைஇன்றி ஆறியதே...., என் காதலியே....., என்னவளே...... வள்ளுவன் காதலித்து இல்லை போலும்...., இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்......, "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே என்னவளே, உன் விழியால் சுட்ட வடு.........,
நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை.... நட்புக்கு அது தேவையும் இல்லை... எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் இங்கே சந்தித்துக்கொண்டோம்.... காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக.. நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்.. இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது... இருந்தும் உறவாடினோம்... பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்... அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்.. அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்... மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது... இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)
"நான் சாம்பலானாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீது உனக்காக சில பூக்கள் பூக்குமே "
+*+*+*+*+*+*+*++*+*+*+*+*+*
பிரிவை தாங்கும் சக்தி எனக்கில்லை,,,,,,,,,,,,, என்னை கேட்டால் பிரிவே இல்லாத உலகம் வேண்டும் என்பேன்,,,,,, ஒவ்வொரு உறவிலும் அன்பின் பிணைப்பு இருப்பதால்,,,,,,,,,,, அன்பே யாவிலும் பலம் என்று சொல்வேன்,,,,,,,,,,,,,,,
*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*
அன்பான புன்னகை வாடிய மனதையும் மலர வைக்குமாம்,,,,,,,, ஒவ்வொரு விடியலையும் புன்னகையோடு மலர விடுங்கள்,,,,,,,,,,, அவ்வாறு செய்தால் துன்பம் கூட நம்மை நெருங்க தயங்கும்,,,,,,,,,,
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கைத் தவறி விழும் முன் சொன்னேன் "Sorry" தாத்தா என்று ...!
தூங்கும் பொழுது கழுத்து வரை போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் "Thanks" ம்மா என்று ...!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன் "Happy Birthday da" என்று ... !
காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர் அவர் சொல்லும் முன் - முந்திக் கொள்வேன் "Good Morning Uncle" என்று ...!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி கணவனுடன் அவள் பேசும் முன் - முடித்துக் கொள்வேன் "Hai" என்று ...!
மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன் "I Love You" என்று ...!
இரவில் ... வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை குத்தியது முள் ...! " அம்மா" என்று அலறினேன் ... குத்தியது முள்ளில்லை - என்னை குத்திக் காட்டியது - என் தமிழ் ...!
தமிழன் எங்கும் சாகிறான் சாகும் முன் ஜீவா சொன்னார் எதையுமே புரிந்து கொள்ள முடியாத மன் ஆந்தை களாக பொய் விட்டோமே என்று அது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் மது வும் போதை மருந்தும் டிவி கிளப் மொபைல் போன்றவை முன்னால் பிட்சை எடுக்க வேண்டும் பல நூறு ஆண்டு காலம் முன்னால் நம் முன்னோர்கள் குடி காக்க நம் குலம் காக்க இன்னுயிர் நீத்து மட்டுமன்று தம் வாழ்நாள் முழுக்க கண்களில் வெறி ஏந்தி மார்பினில் வேலே ஏந்தி காத்த தமிழ் மானம் இன்று காற்றில் பரகிரதே நாம் எல்லோரும் நம் வீட்டு பெண்கள் மானபங்கப்படுத்த படும்வரை காதிருபோமா அல்லது அப்பொழுதும் அதையும் கண்டு ரசிக்கும் உன்னத நிலையை அடைந்து விட்டோமா ? ஐய்யய்யோ வாழ்வு இனிக்கலையே என்னால் இயலையே நான் செத்து ஓழியும் நாள் என்னாளோ அந்த திருநாளோ
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல் கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு உயிரை கொடுக்க வருகிறேன் ! இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம் என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை ! ஆனால் நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்.. உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை ..... என்றும் நட்புடன்................. நட்பு
படித்து படித்து நெஞ்சம் பரவித்து போனது ! நினைத்து நினைத்து நெஞ்சம் சுமை தாங்கியது ! உன் நினைவுகளில் நான் பசியாறிக் கொள்கிறேன் மீண்டும் மீண்டும் நான் படித்து பார்த்தாலும் புத்தும் புதிய வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே ! சந்தோஷ கனவுகளில் என்னை மிதக்கவைத்த நண்பரே நானாக நானில்லை நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....! என் நட்புடன் கலந்த உங்கள் அன்பிற்கு என்ன தவம் செய்தேன்
பற்றற்று வாழ நினைத்தேன் உன்னை பார்க்கும் முன்பு வரை.. ஏனோ இன்று பற்று வந்து என்னை பற்றி கொண்டுவிட்டது. என்னை அறியாமல்
உன்மீது கொண்ட நேசத்தால். உன் மீது கொண்ட பாசமெல்லாம் வெறும் வேஷம் என்று எண்ணிவிடாதே.
உன் மீது ஆனா என் நேசமெல்லாம் எனக்கான தேசம் அது!
நான் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்றாவது ஒரு நாள் என் நேசத்தை உன்மனத்தில் துளிர் விட செய்யும் என்ற நம்பிக்கையில் என் மனமும் என் உடலும் காற்றில் கரையாமல் காத்திருக்கின்றது
பழகிய நினைவுகள் பழகிய சில மாதங்காலேயானலும் ஒரு யுகமாய் கடந்துவிட்ட எண்ணம் உனது பிரிவில் கூட எனக்கு இருந்த ஒரே ஆறுதல் கவிதை என்று நான் நினைத்தபோது வார்த்தைக்கூட வர மறுகின்றது அதார்க்கு கூட உன் பிரிவை தாங்க முடியவில்லை நான் என்னை மறக்கின்ற போதிலும் ஓரமாய் புன்னைக்கைக்கிறது ஏட்டில் உனக்காக நான் எழுதிய சில கவிதைகள்..........
தெய்வத்தையும் தேவதையும் நான் நேரில் பார்த்து இல்லை . உன்னை பார்க்கும் முன்பு வரை. கோவிலை சுற்றிவரும் பக்தன் போல என் மனது உன்னை சுற்றிவருகின்றது. பறிகொடுத்த இந்த பக்தன் மனசு இப்பொது பரிதவிகின்றது உன் கருணை காட்டமாட்டாயா? வரம் ஒன்று கொடுக்கமாட்டயா? உன்னை சரணடைய காத்திருக்கிறேன்........
என்னை மறந்து விட்டாயா? இனி என்னை புன்னகையில் தேடாதீர்கள் கண்ணீர்த்துளிகளில் காத்திருக்கிறேன் கண்ணீர் மதுவாகிறது … ——————————— எழுதிப் பாருங்கள் என் போல காதலில் தோற்று .. எழுதுவது பாவம் ரசிப்பது புண்ணியம் -------------------------- நீ மனிதர்களை பாடியது போதும். அன்றில், மணிப்புறா, மான், .. பாடு காதலுக்கு புல்லரித்து விடும். ——————————————— தேயும் நிலவு, ஒழுகும் தேன்கூடு, உதிரும் மலர் எழுதாத டைரி, எண்ணப்படாத மூளை .. இவற்றோடு நீ. சுகிக்கப்படாதவை இப்படியே தொடருமா? ————————————————- உன் தாலி கயிறில் தூக்குப் போட்டு தொங்கும் உன் கனவுகளை தொட்டு விட்டு சொல். என்னை மறந்து விட்டாயா?
உன் அருகாமை வெப்பத்தை பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன் வலியின்றி பிய்த்து போடுகின்றாய் சிறகுகளை. விழி அரும்பும் நீர்த்துளியென ஆசைகள் ததுப்பி வழிய உன் விரல் தொட்டழித்து வெட்கத்தை ஊற்றி விடுகின்றாய் மழையில் அழியும் தெருவோவியமாய் கரைந்து கொண்டிருக்கின்றேன் நாள் முழுதும். --*-- நீ சலனமற்று மௌனங்களை சிந்திக் கொண்டிருக்கின்றாய் ஒவ்வொன்றாய் சேகரித்துக் கொண்டே இருக்கின்றேன் நான்.
எப்படி எடுத்துச் செல்வது பிரிகையில்…! --*-- மீன் தொட்டியிலிருந்து துள்ளி விழுந்த சிறு மீனாய் உன் விழிகளுக்குள் விழுந்து கிடக்கின்றது என் இரவும் பகலும். நீ என்னை அழைத்து சென்று கொண்டே இருக்கின்றாய் நானறியா வனமொன்றில் வேட்டை மானனெ.
காயம் பட்டவனுக்கு அது ஆரும் வரை தான் வலி ஆனால் காயப்படுத்தினவனுக்கு ஆயுள் முழுவதும் வலி....
*********************************
விழிகள் வழியாக இதயத்தில் போர் தொடுத்து என் காதல் சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...
இந்த உலகத்தில் என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான் என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...
என் மூச்சு ஒரு நாள் அதன் முகவரி தேடி வரும் அப்போதாவது திறந்து வை உன் இதயத்தின் கதவுகளை..
உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது...............
கண்களில் வடிகின்ற என் கண்ணீரை விட என் நெஞ்சினில் உறைகின்ற என் குருதியை விட என்னைவாழவைகின்ற என் சுவாசத்தை விட ஏனோ தெரியவில்லை பெண்ணே இவற்றையெல்லாம் விட உன்னையே நான் அதிகமாக நேசிக்கின்றேன்
சிந்தித்த வேலையெல்லாம் சிந்தனையில் அவள் உருவம் எண்ணத்தை மாற்ற என் இதயத்தில் இடமில்லை இதயமெல்லாம் அவள் நினைவை நிரப்பியதால் சுவாசித்த நேரமெல்லாம் அவள் பெயரே ஒலித்ததடி
அலைகள் தீண்ட காத்திருக்கும் கரைகள் போல வண்டுகள் தீண்ட காத்திருக்கும் மலர்கள் போல மேகங்கள் தீண்ட காத்திருக்கும் நிலவு போல உன் கண்கள் தீண்டும் வரை காத்திருக்கும் என் காதல் .....
கவிதைக்குத் தெரியும் என் காதலின் பாசத்தை மலருக்கு தெரியும் என் காதலின் வாசத்தை இசைக்கு தெரியும் என் காதலின் ராகத்தை காற்றுக்கு தெரியும் என் காதலின் சுவாசத்தை கடலுக்கு தெரியும் என் காதலின் ஆழத்தை உன் மனதுக்கு தெரியும் என் காதலின் பாதிப்பை ........
உன் கண்கள் என் மனதை தாக்கும் கனையா...., என்னை இப்படி சுட்டு விட்டதே......, சங்கிலியால் கட்டவும் இல்லை...., என் சட்டையை கிழிக்கவும் இல்லை......, ஆனால் நான் பைத்தியமானேன் உன் விழியால்........
வீட்டின் உள்ளே பாசமாக வீட்டின் வெளியே மனசாட்சியாக படிப்பின் பொது ஆசானாக செயலுக்கு முன் வழிகாட்டியாக செயலின் போது நம்பிக்கையாக செயலுக்குப் பின் கருத்துகளாக தவறுக்கு பின் கண்டிப்பாக எதிரிக்கு முன் தைரியமாக தோல்விக்கு பின் ஆறுதலாக வெற்றிக்கு பின் பாராட்டுகளாக எப்போதும் என்முன் கடவுளாக என் அம்மா!!!