யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Monday, September 14, 2009

Kathalin Unarvukal

உன் அருகாமை வெப்பத்தை
பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன்
வலியின்றி பிய்த்து போடுகின்றாய்
சிறகுகளை.
விழி அரும்பும் நீர்த்துளியென
ஆசைகள் ததுப்பி வழிய
உன் விரல் தொட்டழித்து
வெட்கத்தை ஊற்றி விடுகின்றாய்
மழையில் அழியும் தெருவோவியமாய்
கரைந்து கொண்டிருக்கின்றேன்
நாள் முழுதும்.
--*--
நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.

எப்படி எடுத்துச் செல்வது
பிரிகையில்…!
--*--
மீன் தொட்டியிலிருந்து துள்ளி விழுந்த
சிறு மீனாய் உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும். நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய் நானறியா வனமொன்றில்
வேட்டை மானனெ.

1 comment:

மகிழ்நன் said...

//நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.///

ம் ரசித்தேன்....

அருகாமை என்பது தொலைவு என்பது பொருளாகும்...கல்லாமை, இயலாமை போன்று....

வாய்ப்பு இருப்பின்
என்னுடைய வலைப்பூவையும் படித்து கருத்துச் சொல்லவும்

http://kayalmakizhnan.blogspot.com/