புதைந்து கிடந்தா
உன் முகம்
கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................
விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............
நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................
நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................
பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................
விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................
ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.
சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!
No comments:
Post a Comment