யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"
Showing posts with label friend. Show all posts
Showing posts with label friend. Show all posts

Sunday, October 4, 2009

Tamil Good Friend Lyrics

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!
என்றும் உங்கள் நல்ல நண்பன் தங்கம் !

Sunday, September 6, 2009

நண்பனின் கை வண்ணம்


காயத்தை விட நட்பின் வலி அதிகமா?

காயம் பட்டவனுக்கு அது ஆரும் வரை தான் வலி ஆனால்
காயப்படுத்தினவனுக்கு ஆயுள் முழுவதும் வலி....

*********************************

விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...

இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...

என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..

உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............

Friday, August 14, 2009

காதலியின் கடை விழி பார்வை.......

உன் கண்கள் என் மனதை தாக்கும் கனையா....,
என்னை இப்படி சுட்டு விட்டதே......,
சங்கிலியால் கட்டவும் இல்லை....,
என் சட்டையை கிழிக்கவும் இல்லை......,
ஆனால் நான் பைத்தியமானேன் உன் விழியால்........