நான் இப்பொழுது.....................
plz ஒரே ஒரு தம் அடிச்சுக்கறேன்....
நேற்று
உன்னை கெஞ்சி கூத்தாடி
நீ கடை கண்ணால் கோபம் காட்டி
அனுமதித்த பொழுது கிடைத்த சுகம்
பாக்கெட் பாக்கெட்டாய்
குடித்து பார்த்தும் கிடைக்கவில்லை!
விட்டு விட்டேன் தம் அடிப்பதையே!
நேற்று
ஏதோ ஒரு போய் சொல்லி
நீ சிறுக சிறுக சேமித்து வைத்ததை
மொத்தமாய் பிடுங்கி போய்
தண்ணி அடித்த சுகம்
இப்போது
நினைத்தால் மதுகடையே
வாங்கும் தகுதி இருந்தும்
முடியவில்லை சுத்தமாய் !!!
அவசர தேவைக்கு
நான் நிற்கும் வங்கி
காதலுடன் நீ கழற்றி தரும் உன் நகைகள்!!!!!!!!!
நேற்று
அருவருப்பாய் நான்
வாழ்ந்த பொழுது முழு காதலுடன்
என் பக்கம் இருந்தாய்........................
இப்போது
அர்ததமாய் வாழ்கிறேன் முடிந்த வரையில்
நீயும் இல்லை! காதலும் இல்லை!!
என்னதான் ஜெயித்தாலும்
உன்னை விட்ட பிறகு தான்
உருப்பட்டேன் என்று இந்த குருட்டு உலகம்
சொல்வதில் வலிக்கிறது மொததமாய் !!!!!!!!!!
யாருக்கு தெரியும்
என்னை பெற்றவள் தாயென்றாலும்
ஆளாக்கியவள் நீயென்பது ...................
1 comment:
i really super super super yaaaaaaaaaaaaaaaaaaaaaa i like it
Post a Comment