யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, September 29, 2009

Kanniril Kathirukkum IVAL....

kaathirukiren

தெய்வத்தையும்
தேவதையும் நான்
நேரில் பார்த்து
இல்லை .
உன்னை பார்க்கும்
முன்பு வரை.
கோவிலை சுற்றிவரும்
பக்தன் போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
பறிகொடுத்த இந்த
பக்தன் மனசு
இப்பொது பரிதவிகின்றது
உன் கருணை
காட்டமாட்டாயா?
வரம் ஒன்று
கொடுக்கமாட்டயா?
உன்னை சரணடைய
காத்திருக்கிறேன்........

என்னை மறந்து விட்டாயா?

என்னை மறந்து விட்டாயா?
இனி என்னை புன்னகையில் தேடாதீர்கள்
கண்ணீர்த்துளிகளில் காத்திருக்கிறேன்
கண்ணீர் மதுவாகிறது …
———————————
எழுதிப் பாருங்கள் என் போல காதலில் தோற்று ..
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்
--------------------------
நீ மனிதர்களை பாடியது போதும்.
அன்றில், மணிப்புறா, மான், .. பாடு
காதலுக்கு புல்லரித்து விடும்.
———————————————
தேயும் நிலவு, ஒழுகும் தேன்கூடு, உதிரும் மலர்
எழுதாத டைரி, எண்ணப்படாத மூளை .. இவற்றோடு நீ.
சுகிக்கப்படாதவை இப்படியே தொடருமா?
————————————————-
உன் தாலி கயிறில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

Wednesday, September 23, 2009

Yannuir Neethane!...

உன் நெஞ்சம் தொட்டுப் பேசும் என்மனமதனை...!

தான் என்னசெய்யக் காத்திருக்கிறாயோ...!!

அதனை நான் நினைத்து என் நெஞ்சம் நெகிழ்கிறது...!!!

என்னுயிரிடம் நீ யாரென்று நான் கேட்ட போது...!

உன் பெயர் சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டது...!!

என்னிடம் உன்னை அறிந்த நான்...!!!

என்னுயிரை நான் அறியாமல் விட்டதேனோ வென்றெண்ணி...

மெய்மறந்து வினவினேன் உன்னிடம்...!

நீயோ ! ! ! : ) : ) சிரித்தாய் (பல முறை)... ஆனால் விடையளிக்கவில்லை...?

அக்கணம் நான் உணர்ந்தேன்...

என்னுயிர் என்னை மறந்து...!

தன்னையும் மறக்கச் செய்துவிடும்...!!

ஆனால் உன்னை ஒருபோதும் மறவாதென்று...!!!

Sunday, September 20, 2009

எதிர் பார்ப்பு

புதைந்து கிடந்தா
உன் முகம்

கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................

விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............

நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................

நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................

பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................

விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................

ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.

சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

Uthadukal..

மெளனமாக‌!....
இருந்த போது....
'சந்தித்தோம்'...
பேசும்போது!...
'பிரிந்துவிட்டோமே'....

இப்படிக்கு,
"உதடுகள்"

Monday, September 14, 2009

Kathalin Unarvukal

உன் அருகாமை வெப்பத்தை
பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன்
வலியின்றி பிய்த்து போடுகின்றாய்
சிறகுகளை.
விழி அரும்பும் நீர்த்துளியென
ஆசைகள் ததுப்பி வழிய
உன் விரல் தொட்டழித்து
வெட்கத்தை ஊற்றி விடுகின்றாய்
மழையில் அழியும் தெருவோவியமாய்
கரைந்து கொண்டிருக்கின்றேன்
நாள் முழுதும்.
--*--
நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.

எப்படி எடுத்துச் செல்வது
பிரிகையில்…!
--*--
மீன் தொட்டியிலிருந்து துள்ளி விழுந்த
சிறு மீனாய் உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும். நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய் நானறியா வனமொன்றில்
வேட்டை மானனெ.

Friendship lyrics

அன்புக்கு இன்னொரு தாய்

கண்டிக்க இன்னொரு தந்தை

சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்

வழி காட்டும் இன்னொரு ஆசான்

வமபிளுக்கும் இன்னொரு சகோதரி

முகம் புதைக்க வந்த தலையணை

வருடி செல்லும் இன்னொரு தென்றல்

நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்

விமர்சிக்க ஒரு விமர்சகன்

என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி

என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி

என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி

என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி

நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்

எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்

நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை

என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்

என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை

நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்

நான் வாழ இன்னுமோர் உறைவிடம்

எனக்காக அழும் இன்னொரு வானம்

எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்

என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி

எனக்காக மட்டும் இறைவம் படைத்த

இன்னொரு உலகமே என் தோழி

Sunday, September 6, 2009

நண்பனின் கை வண்ணம்


காயத்தை விட நட்பின் வலி அதிகமா?

காயம் பட்டவனுக்கு அது ஆரும் வரை தான் வலி ஆனால்
காயப்படுத்தினவனுக்கு ஆயுள் முழுவதும் வலி....

*********************************

விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...

இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...

என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..

உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............