யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Monday, November 30, 2009

Manitha..


ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

Tamil Lyric

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

Yenn nanbanin Puthakam

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.

Sunday, November 29, 2009

Yathavathu Sei

ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.

Thaanam

நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.

Life Is Short

உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்

Thursday, November 26, 2009

Vazkkai Tattuvam

வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

Onine Tamil Lyrics

இரவு என்பது பகலின் நிழல்,
காதல் என்பது கண்ணீரின் நிழல்,
நட்பு என்பது நம்பிக்கையின் நிஜம்,
நிழலாக இருப்பதைவிட நிஜமாக இருப்பது இனிமை..

New Lyric

சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்

Sleeping Time

ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.

Manathil Nimmathi

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

Tuesday, November 24, 2009

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக்
கிராமத்தின் தலைவருக்கு ஒரு
பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு
அழகிய பெண்னை யாரும்
பார்த்ததும் இல்லை

கேட்டதும்
இல்லை.அந்தப் பெண் பக்கத்து
கிராமத்தைச்
சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து
விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த
கிராமமும் அந்தக் காதலை
எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை
விட்டு ஒட

தீர்மானித்து ஒரு
நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.

உடனே
ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
தேடியது. இருந்தும் அவர்களால்
கண்டு பிடிக்கவே
முடியவில்லை.
  
அதன் பிறகு அவர்கள்
 அந்த்க்
காதலை ஏற்றுக் கொள்ள முடிவு
செய்து செய்தித்தாளில்
விளம்பரமும்
கொடுத்தனர்.அதைப்
 பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர்
திரும்பியது. சந்தோஷப்
பட்ட
ஊர் மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
முறையில்
 திருமணம் செய்ய
முடிவு
செய்தனர்.
 திருமணத்திற்குத் தேவையான
பொருட்களை
 வாங்க
நகரத்திற்குச்
சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
எதிரிலேயே
 உயிர்

துறந்தான்.
உடனே அந்தப் பெண்னும்
 மனநிலை
பாதிக்கப்பட்டாள்.
 ரொம்ப நாட்களுக்குப்
 பிறகு
நினைவு திரும்பிய அந்தப் பெண்
குடும்பத்தினருடன்
 வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள்
அப்பெண்னின் தாய் ஒரு கனவு
கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
மகள் அவளுடைய
 காதலன் நினைவாக
வைத்திருக்கும் உடையில்
இருக்கும்
இரத்த்க் கறையை
உடனே துவைக்க வேண்டும்
என்றது,இல்லா விட்டால்
 மோசமான
விளைவுகள்
ஏற்படும் என்றும் எச்சரிக்கை
செய்தது.
 அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின்
தந்தையிடமும்
கனவில்
எச்சரித்தது.ஆனால் அவரும்
அதைக் கண்டு
கொள்ளவில்லை
  அடுத்த நாள் அப்பெண்னின்
கனவிலேயே தோன்றி
எச்சரித்தது.அவள் உடனே
தாயிடம் கனவைப்
பற்றிக்
கூறினாள். அதன் பிறகே அதன்
முக்கியத்துவம்
உணரப்பட்டது.அவள் தாய் அதை
துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும்
 அதைத்
துவைத்தாள்.
இருந்தும் தேவதை
மறுபடியும் அடுத்த நாள்
கனவில்
வந்து கறை சரியாகப்
 போகவில்லை
என்று
 எச்சரித்தது.
மறுபடியும்
அப்பெண்
அத்துணியைத்
துவைத்தாள்.இருந்தும்
கறை
போகவில்லை.
 அடுத்த நாள் காலையில்
அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
பெண்
கதவைத்
திறந்தாள்.அப்போது கனவில்
வரும் அதே பெண் நின்று
கொண்டிருந்தாள். அவள் முகம்
கனவில் வருவதைப் போல் கனிவாக
இல்லாமல்
வெளிறிப் போய் இருந்தது.உடனே
இவள் பயத்தினால்
அலறினாள்.
  அந்தத் தேவதை கோபத்துடன்
கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்
எக்ஸல் போடு கறை போயிடும்"
என்றது.
  இதைப் படித்ததும் உடனே

என்னை
உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு
அனுப்பியவரைத்
தேடிக்கிட்டு இருக்கேன்

Sunday, November 22, 2009

Time

நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்

Kadhal Tholvi

நான் இப்பொழுது.....................

plz ஒரே ஒரு தம் அடிச்சுக்கறேன்....
நேற்று
உன்னை கெஞ்சி கூத்தாடி
நீ கடை கண்ணால் கோபம் காட்டி
அனுமதித்த பொழுது கிடைத்த சுகம்

பாக்கெட் பாக்கெட்டாய்
குடித்து பார்த்தும் கிடைக்கவில்லை!

விட்டு விட்டேன் தம் அடிப்பதையே!

நேற்று
ஏதோ ஒரு போய் சொல்லி
நீ சிறுக சிறுக சேமித்து வைத்ததை
மொத்தமாய் பிடுங்கி போய்
தண்ணி அடித்த சுகம்

இப்போது

நினைத்தால் மதுகடையே
வாங்கும் தகுதி இருந்தும்
முடியவில்லை சுத்தமாய் !!!

அவசர தேவைக்கு
நான் நிற்கும் வங்கி
காதலுடன் நீ கழற்றி தரும் உன் நகைகள்!!!!!!!!!
நேற்று
அருவருப்பாய் நான்
வாழ்ந்த பொழுது முழு காதலுடன்
என் பக்கம் இருந்தாய்........................

இப்போது
அர்ததமாய் வாழ்கிறேன் முடிந்த வரையில்
நீயும் இல்லை! காதலும் இல்லை!!

என்னதான் ஜெயித்தாலும்
உன்னை விட்ட பிறகு தான்
உருப்பட்டேன் என்று இந்த குருட்டு உலகம்
சொல்வதில் வலிக்கிறது மொததமாய் !!!!!!!!!!

யாருக்கு தெரியும்
என்னை பெற்றவள் தாயென்றாலும்
ஆளாக்கியவள் நீயென்பது ...................

Wednesday, November 18, 2009

Kathaliyin Kalyana Parisu

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்லா மூக்குமுட்ட சாப்டு மொய் எழுதாம ஓடிவந்துடலாம் மாமு......

Naal Kaattium kathalium

நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே...

Tuesday, November 17, 2009

Natpu Kavithai

வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை

காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை

நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை

நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை

பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை

நட்பு அழகானது தான்
காதல் வராத வரை

The Real Lyric

அன்பைக்கொடு, உதவியைக் கொடு,

உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு.

ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது

Wednesday, November 11, 2009

Natpin Unarvukal

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும் !


"உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...

Natpu Kavithaigal

நட்புசிறகுகள் கிடைத்தவுடன் பறப்பது நட்பு அல்ல ,
சிலுவைகளே கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு,
என்றும் நட்புடன் அனு

Tuesday, November 10, 2009

வாழ்த்து மடல்

கடலே உன்னை பார்க்கிறேன்,
கரைக்கு முன்னால்.
உன் வாழ்க்கையை,
அலையும் கரையும்மாய்....................

வானமே உன்னை நினைக்கிறேன்,
பூமிக்கு கிழ்யே.
உன் வாழ்க்கையை,
மேகமும் காற்றுமாய்...............

சூரியனே உன்னை தரிசிக்கிறேன்,
காலை வேலையில்,
உன் வாழ்கையை.
இரவும் பகலும்மாய் ..............

நிலவே உன்னை பாடுகிறேன்,
இரவு நேரத்தில்,
உன் வாழ்கையை.
தாயும் சேயும்மாய் ...................

திருவள்ளுவரே உன் புகழ்யை கேட்கிறேன்,
என்றும் என்னளிலும்,
உன் வாழ்கையை.
ஆசிரியரும் மாணவனும்மாய் ................

மனிதனே உன்னை மணகோலத்தில் சந்திக்கிறேன்,
துன்பத்தை மறந்து,
உன் வாழ்கையை.
மணமகனும் மணமகளும்மாய்......

துன்பத்தை அணுவாய் உடைத்தெறி,
இன்பத்தை வள்ளலாய் பகிர்ந்தளி,

Kathaliyin Kadai Kan Parvai

புன்னகை செய்
தப்பில்லை.
ஆனால்
நான் சாலை கடக்கும் போது
வேண்டாமே,
கால்களுக்குக் கட்டளையிட மறந்து
மூர்ச்சையாகிறது
மூளை.

ஒவ்வொரு பாராட்டிலும்
கன்னம் சிவக்கும்
என் கவிதை,
உன் வெட்கத்தின் முன் மட்டும்
வெட்கித் தலை குனிக்கிறது.

உனைப்பார்க்கும் வரம் கொடு
கவிதை படிப்பதை
கிடப்பில் போடுகிறேன்.
உன்னுடன் பேசும் வரம் கொடு
இசைப்பேழையை
இருட்டில் வைக்கிறேன்.
உன் விரல் தீண்டும் வரம் கொடு
ஓவியம் வரைவதை
ஒத்தி வைக்கிறேன்.
நீயோ,
என் தவத்தை ரசிப்பதற்காகவே
வரம் தர மறுக்கிறாய்.

எந்த ஆடை அழகென
கேட்கிறாய்,
எந்த பூ எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி
கேட்பதாய்ப் படுகிறது
எனக்கு.

உனக்குப் பிடித்த ஆடையின்
வண்ணம்
கருப்பு என்று
தோழி சொன்னாள்.
என்கிறப்போது
முகம் பார்க்கும் கண்ணாடி
முக்கியமில்லாமல் போய்விட்டது

அன்பே

Love Feelings

"அவள்!..திட்டிவிட்டு...
சென்றால் கூட!....
சிரித்து கொண்டு இருந்திருப்பேன்!....
ஆனால்,அவளோ!...
சிரித்து விட்டு போய் விட்டாள்!...
அதான்,இன்னும்,
'சிந்தித்து' கொண்டுருக்கிறேன்"....

Sunday, November 8, 2009

New Thirukural

உன் ஓர விழி பார்வையில் என் உயிர் உருகி போனது....,
உன் கை பிடித்து நடக்க காலமெல்லாம் காத்திருக்க தோன்றியது.....
நீ உண்ணும் அழகை நான் ரசிக்க என் பசியே ம(றை)றந்து போனது,
நீ உண்ணும் உணவாய் நான் மாற தோன்றியது....,
உன் கண் என்னும் கணையால் என் மனதை தாக்கினாய்,,,,
உன் புன்னகையால் என் புண்பட்ட நெஞ்சமும் புகைஇன்றி ஆறியதே....,
என் காதலியே.....,
என்னவளே......
வள்ளுவன் காதலித்து இல்லை போலும்....,
இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்......,
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே என்னவளே,
உன் விழியால் சுட்ட வடு.........,

Teriyuma Ungalukku

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....
நட்புக்கு அது தேவையும் இல்லை...
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே சந்தித்துக்கொண்டோம்....
காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..
நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..
இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...
அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)

Sunday, November 1, 2009

Wife's Prayer

இன்று உனக்கு காதலி இல்லை என்று வருதபடதே ...!!!!
இது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாக கூட இருக்கும் .,.,.

i like too so much

Beautiful Tamil Lyrics

"நான் சாம்பலானாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீது
உனக்காக
சில பூக்கள் பூக்குமே "

+*+*+*+*+*+*+*++*+*+*+*+*+*

பிரிவை
தாங்கும் சக்தி எனக்கில்லை,,,,,,,,,,,,,
என்னை
கேட்டால் பிரிவே இல்லாத உலகம் வேண்டும் என்பேன்,,,,,,
ஒவ்வொரு உறவிலும் அன்பின் பிணைப்பு இருப்பதால்,,,,,,,,,,,
அன்பே யாவிலும் பலம் என்று சொல்வேன்,,,,,,,,,,,,,,,

*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*

அன்பான புன்னகை வாடிய மனதையும் மலர வைக்குமாம்,,,,,,,,
ஒவ்வொரு விடியலையும் புன்னகையோடு மலர விடுங்கள்,,,,,,,,,,,
அவ்வாறு செய்தால் துன்பம் கூட நம்மை நெருங்க தயங்கும்,,,,,,,,,,

Tamil Lyrics

கவிதை எழதும்
மனிதன்
கவிஞன் ஆகுகிறான்.......

யார்?
என்று கேள்வி
கேர்ப்பவன் அறிவளியகிறான் ...............

உயிர்க்கு
பயத்தவன்
உண்மையை மறைக்கிறான் .........

மானத்திற்கு
பயந்தவன்
உயிரை விடுகின்றான்

தமிழ்க்கு
அடிமை
கவிதை ............

கவிதைக்கு
அடிமை
கவிஞன்.................

நாளுக்கு
நாள்
கிழமை அடிமை .......

நீ உன்
உடபிற்கு
அடிமை ............

உயிர்
நட்புக்கு
அடிமை................

நண்பன்
எனக்கு
அடிமை ............

நான்
உனக்கு
அடிமை .......

Kathalithu Paar

வானம் வசப்படும் பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும் எந்த இடத்திலும்
காதலியின்

மனம் வசப்படும் என்று சொல்லவில்லை

எனக்காக எதையும் தியாகம் செய்.

ஆனால்


எதற்காகவும் என்னை
தியாகம் செய்துவிடாதே என்றாய்.

இப்பொழுது "எதற்காக"
என்னை தியாகம் செய்தாய்?

ஒவ்வொரு
முறையும் உன் வாசலை கடக்கும்போது

உன்

கொலுசொலி
சொல்லும் சங்கேதம் புரிவதில்லை
எனக்கு.

காதலால்
கசிந்துருகி கால்கடுக்க நின்று
எவ்வளவோ பேசினாலும்

நீ
பதிலாகத் தரும் மௌனத்திற்கு
அர்த்தம் விளங்குவதில்லை
எனக்கு!

என்னவளே

என்னவளே.......!

எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்.......!

உன் இமைகளாகச் சொன்னான்...!
உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன் ....!!

கண்களாகச் சொன்னான்...!
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்.....!!

உன் கூந்தலாகச் சொன்னான்...!
உன் முகம் மறையுமே என்று மறுத்து விட்டேன்....!!

உன் உயிராகச் சொன்னான்...!
பிரிந்து விட்டால் ,இறந்து விடுவாய் என்று உதிர்த்து விட்டேன்....!!

பின்பு தான் ..........

உன் இதயமானேன்.....!
என்றும் உனக்காக துடித்துக் கொண்டு...............