யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, December 23, 2011

Thinam Maranam

உதிரும் மலருக்கு ஒரு நாள்தான் மரணம்.

பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்.

Sunday, December 11, 2011

Kadaisi Mutham


உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

Wednesday, November 16, 2011

My Feelings


Some things are left undone,
some words are left unsaid,
some feelings are left unexpressed,
but
someone as sweet as you
could never be left unmissed ♥♥

Friday, November 11, 2011

உன்னால்

உன் மனம் புண்படும் வரை,

உன்னால்

புரிந்து கொள்ள முடியாது ...

"காதல்" என்றால் என்னவென்று....!

உண்மையாக நேசித்தது

நான் சரியாக செய்த

ஒரே தவறு

அவளை

உண்மையாக நேசித்தது தான்.....!

Monday, November 7, 2011

Sunday, November 6, 2011

சொர்க்கம் கண்டவன்


வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?


மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!


Sunday, October 16, 2011

Kathal Tholvi

♥ ♥ காதலியை அறிந்த எனக்கு... அவளை காதலிக்க தெரியவில்லை... யோசித்தேன் காரணமும் புரியவில்லை ♥ ♥

♥ ♥ என் கண்ணுக்கும் மனதுக்கும் கருத்து வேறுபாடு ...உன்னை பார்க்க வேண்டுமென்று கண்களும்... தனக்கு வலிகளை அளிக்க வேண்டாமென மனதும் ♥ ♥

♥ தினசரி என் தூக்கம் கெடுத்து ...தூங்காமல் என்றும் அவள் நினைவுகள் ♥ ♥


♥ ♥ வெற்றியிலும் தோல்வியிலும் ..பழியை ஏற்று கொள்கிறது காதல் ♥ ♥

Wednesday, October 5, 2011

Wednesday, August 10, 2011

Wednesday, August 3, 2011

Wednesday, January 26, 2011