யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Wednesday, February 3, 2010

தமிழ் MP3 கிடங்குகள்

தமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது. கூகிளில் intitle:"index of" "parent directory" tamil எனத் தேடினால் அவன் "நேரடி" இறக்க வசதியுள்ள தளங்களை வரிசையிட்டு காட்டுகின்றான்.
உதாரணத்துக்கு இங்கே சில சுட்டிகள்.

திரைப்படப்பாடல்கள்

http://www.tamilsongcollections.blogspot.com/
http://tamilvenkai.com/Tamilthaalam%20Mp3%20Database/index.php?dir=Tamil%20Mp3s/
http://www.tamiljukebox.com/www.rose4you.dk/index.php?dir=01.%20Tamil/
http://www.tamilrage.net/Mp3/database/index.php?dir=
http://isaitamil.in/Tamilmp3/index.php?dir=
http://www.tamilcowboy.com/mp3/
http://sangeethamshare.org/murthy/

தமிழ் ரிங்டோன்கள்

http://www.tamiljukebox.com/mobile/index.php?dir=Ringtones/

வீடியோ பாடல்கள்

http://www.thuvi.com/songs/videofiles/tamil/

ஸ்லோகங்கள்

http://www.prapatti.com/slokas/mp3/

கிறிஸ்தவ பாடல்கள்

http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index.php?dir=

இஸ்லாமிய பாடல்கள்

http://islamwap.info/

பழைய பாட்டுகள் மட்டுமல்லாது புது பாடல்களும் கிடைக்கின்றன. ஆச்சர்யமாய் சில புதுப் படங்களின் பாடல்கள் அவர்கள் வெளியிடும் முன்னறே இணையத்தில் வந்துவிடுகின்றது. இப்படியே போனால் வீடியோக்களின் கதையும் மென் புத்தகங்களின் கதையும் அப்படியே ஆகிவிடும் போலிருக்கின்றது. வேர்க்க வேர்க்க அதனை உருவாக்கிய படைப்பாளி அவனுக்கான கூலியை பெற்றுக் கொள்ளாமலேயே இங்கு போகின்றான். ஒரெ கிளிக்கில் புத்தம் புது MP3களை இலவசமாய் இறக்கம் செய்யும் போது நம் போன்ற பொது ஜனம் அறியாமையினாலோ என்னவோ குற்றமனப்பான்மை கொள்வதில்லை. அதற்கு பதிலாக அபூர்வத்தை எளிதாய் இலவசமாய் கிட்டிய மகிழ்ச்சியே கொள்கின்றார். இப்படி சில்லறை சில்லறையாக தயாரிப்பாளர்களுக்கு கோடிக் கணக்கில் இழப்பு. இது இப்படியிருக்க இந்த பைரசிகளுக்கெல்லாம் முடிவு கட்ட பெருசுகள் கூட்டம் கூடி கட்டம் கட்டி பேசி ஒரு முடிவுக்கே வந்து விட்டார்கள். அதன் பெயர் தான் Digital rights management அதாவது DRM.

ஒருவேளை 2010-ல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டாரின் திரைப்பட MP3 அத்தனை எளிதாய் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். டிராக் ஒன்றை 20 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்க வேண்டி வரும். நான் வாங்கிய டிராக்கை புத்திசாலித்தமாய் எனது மைடிரைவ் வழி உங்களுக்கு வழ்ங்கினால் நீங்கள் இறக்கம் செய்வீர்கள். ஆனால் அந்த பாடல் இசைக்காது. பதிலாய் அது ஆன்லைன் ஸ்டோர் போய் அங்கு லைசென்ஸ் வாங்க உங்களை நச்சரிக்கும்.அது என் கணிணியில் மட்டுமே பாடும் படி வடிவமைக்கப்பட்டதாய் இருக்கும். இது தான் டிஆர்எம்.

இந்தத் தொல்லை ஏற்கனவே மேற்கில் பிரபலம்.ஒரு டாலர் தானே போனால் போகிறதுவென இது மாதிரி பாடல் டிராக்குகளை சில்லரையாக உச்ச தர MP3 வடிவில் வாங்குகின்றார்கள். பழகியும்விட்டார்கள். இது சீக்கிரத்தில் நம்மூருக்கும் வரும். நமக்கும் பழகிவிடும்.

DRM-ஐ உடைக்க முடியாதா?
ஏன் முடியாது? அந்த அனலாக் ஹோல் இருக்கின்றதே, அது தான் இந்த படைப்பாளிகளுக்கெல்லாம் பயங்கர தலைவலியாய் இருக்கின்றது. உதாரணத்துக்கு பாருங்கள்.
DRM பாதுகாக்கபட்ட MP3 இசையை ஸ்பீக்கரில் தானே கேட்கப்போகின்றோம். அந்த ஸ்பீக்கரிலிருந்து வரும் இசையை பதிவு செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்? பெப்பே DRM.
DRM பாதுகாக்கபட்ட வீடியோவை ஸ்கிரீனில் தானே பார்க்கப்போகின்றோம். அந்த ஸ்கிரீனில் ஓடும் படத்தை வீடியோ ரெக்கார்டிங் செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்? பெப்பெப்பே DRM.
DRM பாதுகாக்கபட்ட Pdf மென்புத்தகத்தை கணிணி திரையில் தானே படிக்கப் போகின்றோம். அந்த திரையிலிருப்பதை பிரிண்ட் ஸ்கிரீன் செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்? பெப்பெப்பெப்பே DRM.

இதைத் தான் Analog hole என்கின்றார்கள். இங்கு trade off ஆவது தரம். ரெக்கார்ட் செய்யப்பட்ட கோப்புகளின் குவாலிட்டி அவ்வளவு நன்றாய் இருக்காது. திருட்டு விசிடி போல கரகர சொரசொரவென்றிருக்கும்.

ஆக அப்போது கிடைக்கும் தரத்துக்காக காசு கொடுத்தாவது DRM கோப்புகளை வாங்க நாம் தயங்க மாட்டோம் என்பது என் எண்ணம்.

ஓட்டலில் குடிக்க குழாய் தண்ணீரை இலவசமாய் கொடுத்தாலும் தரத்துக்காக மினரல் வாட்டர் காசு கொடுத்து வாங்க பழகிவிட்டோமே?

No comments: