யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, July 22, 2012

Manaivi

என் தோளோடு தலைசாய்க்க. . !

தோழியைபோல் தோள் கொடுக்க. . !

நிஜத்தை உணரவைக்க. . !

நிழலாய் கூடவர. . !

என்னுயிராய் வந்தவள்

என் பிரியமான மனைவி. . !

எத்தனை யுகம்தான்

தவம் இருந்தேன். . !

எத்தனை காலம்தான்

விழித்திருந்தேன். . !

என் உயிரை தேடி அலைந்தேன். . !

என் உயிர் என்னிடம்

சேருமா இன்று

என் உயிர் காணமல்

என் ஆயுள் முடிந்துவிடுமா

என்று அச்சம் கொண்டேன். . !

கண்டுகொண்டேன் அவளை

அழகாக சிரித்துகொண்டிருந்தாள். . !

என்னுள் ஆட்சி செய்பவள். . !

என் உயிரை கண்டபிறகு

பேசதுடித்தேன் அவளிடம். . !

முதன் முதலில் அவளின்

இனிய குரலை கேட்டேன். . !

என்னையே மறந்தேன். . !

எனக்கு அவள் தோழி ஆனாள். . !

பிறகு காதலி ஆனாள். . !

பின் என்னுள் பாதி ஆனாள். . !

அவள்தான் என் உயிரானவள். . !

என் உயிர் மனைவி ஆனவள். . !

எனக்கான உலகம் முழுவதும்

நீயாகவே இருக்கிறாய். . ! ♥ ♥ ♥ ♥ ♥

Nee Irunthal

தோல்வியும் சுகம் தான் தோறக்கடிப்பது

நீ என்றால். . !

அழுகையும் ஆனந்தம் தான் அரவனைக்க

நீ இருந்தால். . !

தனிமையும் இனிமை தான் நினைவுகளாய்

நீ இருந்தால். . !

கோபமும் கொஞ்சல் தான் கோபம்

நீ கொண்டால். . ! ♥ ♥ ♥ ♥ ♥

Yenn Kannill

மேக மூட்டம் போல் உன் நினைவுகள். . !

எப்பொழுது வேண்டுமானாலும்

மழை வரலாம். . !

விண்ணில் இல்லை. . !

என் கண்ணில். . ! ♥ ♥ ♥ ♥ ♥

Kathal Varama Sabama

கண் மை கொண்டு வரையும் ஓவியமோ. . !

எக்காலமும் தொடரும் காவியமோ. . !

பெண்மை கொண்ட மோகனமோ. . !

இங்கு பேசும் மொழிகள் மௌனங்களோ. . !

வெண்மை கொண்ட உள்ளங்களோ. . !

அவை வேண்டி இங்கு சேர்ந்தனவோ. . !

தன்மை இங்கு அழிந்திடுமோ. . !

அதில் தாயன்பு கொஞ்சம் தோன்றிடுமோ. . !

திண்மை கொஞ்சம் கரைந்திடுமோ. . !

அவள் தீண்டினால் முழுதும் வீழ்ந்திடுமோ. . !

அவள் அண்மை கண்டு நெருங்கிடுமோ. . !

அதில் ஆண்மை ஆனந்தம் கண்டிடுமோ. . !

மண்மேல் தோன்றிடும் உயிரிடமோ. . !

மாறாத காதல் என்பது இதானோ. . !

காதல் என்பது வரமோ. . !

இல்லை கடவுள் தந்த கடும் சாபமோ. . ! ♥ ♥ ♥ ♥

Ninaivugal

இன்பத்திலும் துன்பத்திலும்

மனம் விட்டு பேச ஆள்

இல்லாதபோது துணையாக

இதயத்தில் அவள் நினைவுகள். . ! ♥ ♥ ♥ ♥

Pookkal

அன்று சாலையோர பூக்களை

அவள் பாதம்

காயப்படுத்திய போது

தான் அவளிடம்

என் காதலை சொன்னேன். . !

அவளின் பார்வையால்

அன்று முதல் நானும்

அந்தப்பூக்களாகவே

மாறிப்போனேன். . ! ♥ ♥ ♥ ♥ ♥

Kathal

என்னால் சந்தோஷம் வந்தால் என்னை

கொண்டாடுவார்கள். . !

என்னால் கண்ணீர் வந்தால் என்னை

கொல்வார்கள். . !

என்னை கொன்றுவிட்டு இவர்கள்

வாழ்வார்கள். . !

இவர்கள் பொய் சொல்லிவிட்டு நான்

பொய் என்பார்கள். . !

இப்படிக்கு

அழுவதா சிரிப்பதா என தெரியாமல்

விழிக்கும் காதல். . ! ♥ ♥ ♥ ♥ ♥

Azhana Kavithai

கம்பன் சிந்தையில் தவறியதும்

எந்த கவிஞர்

கைக்குள் எட்டாததுமான

கவியோன்று

புனைய அவள் சொன்னாள்

என்னிடம். . !

கற்பனையை புரட்டினேன். . !

மதி முகம் மல்லிகை வாசம். . !

மான் விழி. . !

தேன் மொழி என்றேன். . !

செல்லாது செல்லாது என்றாள். . !

மரகதத்தால் இழைத்த

மாணிக்க வீணை மதியை வென்ற

மன்மதன் தேனீ

எவரும் மீட்டாத எனக்கான வீணை. . !

என்றேன் சிரித்தாள். . !

சிதறியது சிந்தை கண்ணால்

கேலி செய்தாள். . !

ஒரு நிமிடம் யோசித்தேன். . !

இரு வரியில்

ஒரு வரிக்கவிதை எழுதினேன். . !

ஏதுவும் சொல்லவில்லை. . !

அவள்

மௌனமானாள். . !

ஆனால்

அவள் அழகுக்கண்கள் சொல்லியது

இதுவும்

அழகான கவிதை என்று. . ! ♥ ♥ ♥ ♥ ♥

Kathali

தயவு செய்து என்னை காதலில்

தோற்றவன்

என்று மட்டும் சொல்லி

விடாதீர்கள். . !

எனக்கு இனியும் ஒரு ஜன்மம்

வேண்டும். . !

என் காதலியுடன் சேர்ந்து வாழ. . !

Unnall

கை கொண்டு நான் மீட்ட

கருவி கொண்டு வந்திருந்தேன். . !

விரல் கொண்டு நான் மீட்ட

திசையெல்லாம் இசை பரவும்

தேவையான ராகம் கிடைக்கும். . !

பொய்யான இடைகொண்டு

புன்னகைக்கும் பொன்நகையே. . !

உன்னால்

கருவியையும் மறந்துவிட்டேன். . !

கனக்கில்லா ராகங்களையும்

தவறவிட்டேன். . !

உன்னை நான் மீட்டுகின்றேன்

உணர்வெல்லாம் ராகமாக. . !

உடலெங்கும் தாகமாக. . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥