யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, October 30, 2009

உலகம் உன் கையில்

"நண்பனையும் நேசி "

"எதிரியையும் நேசி "

நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான் ,

எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

.முடியும் வரை முயற்சிசெய் ,

உன்னால் முடியும் வரை அல்ல ,

நீ நினைத்து முடியும் வரை .........!"

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

வெற்றி" பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே ,

"தோல்வி" அடையகுடாது என்று நினைத்து போராடு ,

" உலகம் உன் கையில் "

Thursday, October 29, 2009

Natpu Kavithaigal

சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே.....

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது

Sunday, October 25, 2009

Tamil

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
"Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக் கொள்வேன்
"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் - முடித்துக் கொள்வேன்
"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் ...!
" அம்மா" என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

Tamil Mannin Mynthan

தமிழன் எங்கும் சாகிறான்
சாகும் முன் ஜீவா சொன்னார்
எதையுமே புரிந்து கொள்ள முடியாத
மன் ஆந்தை களாக பொய் விட்டோமே என்று
அது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்
மது வும் போதை மருந்தும்
டிவி கிளப் மொபைல் போன்றவை முன்னால்
பிட்சை எடுக்க வேண்டும்
பல நூறு ஆண்டு காலம் முன்னால் நம்
முன்னோர்கள் குடி காக்க நம் குலம் காக்க
இன்னுயிர் நீத்து மட்டுமன்று
தம் வாழ்நாள் முழுக்க கண்களில் வெறி ஏந்தி
மார்பினில் வேலே ஏந்தி
காத்த தமிழ் மானம் இன்று காற்றில் பரகிரதே
நாம் எல்லோரும் நம் வீட்டு பெண்கள் மானபங்கப்படுத்த
படும்வரை காதிருபோமா
அல்லது அப்பொழுதும் அதையும் கண்டு ரசிக்கும்
உன்னத நிலையை அடைந்து விட்டோமா ?
ஐய்யய்யோ வாழ்வு இனிக்கலையே
என்னால் இயலையே
நான் செத்து ஓழியும் நாள் என்னாளோ அந்த திருநாளோ

Monday, October 12, 2009

அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே

நிலவோடு தென்றலும் வரும்வேளை காயங்கள் மறந்திடு அன்பே

ஒருபார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் ஏன் அன்பே அன்பே

காலங்களோடும் இது கதையாகிபோகும் என் கண்ணீர் துளிஇன் ஈரம் வாழும்

தாயாக நீதான் தலை கோத்த வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்...

என் வாழ்கை நீ இங்கு தந்தது அடி உன்னட்கள் நான் இங்கு வாழ்வது

காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை....

ஒருபார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே....

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே... அன்பே..

Saturday, October 10, 2009

Tamil Natpu Kavithaigal

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு

Best Friendship Tamil Lyrics

படித்து படித்து
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !
உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த நண்பரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!
என் நட்புடன் கலந்த உங்கள் அன்பிற்கு என்ன தவம் செய்தேன்

Anbe.. Anbe Tamil Kathal Kavithaigal

காதல்

காதல் அழவும் வைக்கும்!

அலையவும் வைக்கும்!

அழியவும் வைக்கும்!

அன்பை பொழிய வைக்கும்!

அகந்தையை புரியவும் வைக்கும்!

காதலில் ஊடல் இருக்கலாம்,

சாடல் இருக்க கூடாது!

மனதால் ஒத்து போகலாம்!

பணத்தால் பிரிய கூடாது!

பணத்தால் வரும் காதல்

குணத்தால் பயனற்று போகும்

Valkkai Attiyayam Tamil Lyrics

Friday, October 9, 2009

இதுதான் நட்பு.

கவிதை என்பது யோசிப்பது!

காதல் என்பது நேசிப்பது!

நட்பு என்பது சுவாசிப்பது!

யோசிக்காமல் இருக்கலாம்...

நேசிக்காமல் இருக்கலாம்...

ஆனால்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
இதுதான் நட்பு.....

நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..

Uyir Kavithai

என்னை புரிந்தவர்கள் என்னை பிரிந்ததில்லை ..
என்னை பிரிந்தவர்கள் எல்லாம் என்னை புரிந்து கொள்ளதவர்கள்......

Sunday, October 4, 2009

Tamil Good Friend Lyrics

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!
என்றும் உங்கள் நல்ல நண்பன் தங்கம் !

Yanathu Neasam

எனது நேசம்

பற்றற்று வாழ நினைத்தேன்
உன்னை பார்க்கும்
முன்பு வரை..
ஏனோ இன்று
பற்று வந்து என்னை பற்றி
கொண்டுவிட்டது.
என்னை அறியாமல்

உன்மீது கொண்ட நேசத்தால்.
உன் மீது கொண்ட
பாசமெல்லாம்
வெறும் வேஷம் என்று
எண்ணிவிடாதே.

உன் மீது ஆனா
என் நேசமெல்லாம்
எனக்கான தேசம் அது!

நான் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர் துளியும்
என்றாவது ஒரு நாள்
என் நேசத்தை உன்மனத்தில்
துளிர் விட செய்யும்
என்ற நம்பிக்கையில்
என் மனமும்
என் உடலும்
காற்றில் கரையாமல்
காத்திருக்கின்றது

Natpu Kavithaigal

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை

Thedinean.. Lyrics

உங்களிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??

தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!

உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின...!
என் கனவு கவிதையாயின...

அன்பு தோழமை நெஞ்சங்களே...!
வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
நன்றி கூறுகிறேன் உங்களை எனக்கு தந்தமைக்கு

Friday, October 2, 2009

Kadhal Lyrics

நாலிதழ்கள்!

நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!

எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!

உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!

Anbu Manam Veesum Lyrics

அன்பு மனம் வீசும்!
என் வேதனை யாவும்
உனக்கு
வேடிக்கையாக போய்விட்டது
தினத்தினம் இது
வாடிக்கையாக நடப்பதால்!

நேசித்துவிட்டது மனசு
பாவம் அந்த மனசுக்கு
தெரியவில்லை
உன்மனம் கல்
என்று
இருந்தாலும் முயற்சிகிறேன்
எறும்பு ஊற கல்லும் தேயிமாமே!!

உன் காலில் கொலுசு
ஒலி கேட்க்க ஆசைபட்டேன்
ஆனால்
இன்று வரை
ஏனோ
கனவில் ஒலிக்கும் ஒலியாகவே!
போய்விட்டது!

என் மனதை
தள்ளிவைப்பதிலும்
தவிக்கவைபத்திலும்
உனக்கு நிகர்
யாரும் இல்லை!

ஆயிரம் முறை
சண்டைபோட்டிருப்பேன்
ஆனால்
ஒரு முறையேனும்
உன்னை தவிர்க்க
நினைத்ததும் இல்லை
தவிக்க விட்டதும் இல்லை
இந்த மனசால்!

மறவாதே அன்பே
நான் இறந்தாலும்
என் சாம்பலில்
கூட
உனக்கான
அன்பு மனம் வீசும்!

பழகிய நினைவுகள்

பழகிய நினைவுகள்
பழகிய
சில மாதங்காலேயானலும்
ஒரு யுகமாய்
கடந்துவிட்ட எண்ணம்
உனது பிரிவில் கூட
எனக்கு இருந்த
ஒரே ஆறுதல்
கவிதை என்று நான் நினைத்தபோது
வார்த்தைக்கூட வர மறுகின்றது
அதார்க்கு கூட
உன் பிரிவை தாங்க முடியவில்லை
நான் என்னை மறக்கின்ற போதிலும்
ஓரமாய் புன்னைக்கைக்கிறது
ஏட்டில்
உனக்காக நான்
எழுதிய சில கவிதைகள்..........

நம் நட்பு

சிந்திக்குறேன்

சிந்திக்குறேன் ..........
சந்திக்க பல ஆண்டுகள் ஆகலாம் !
அனால் சிந்திக்க ஒரு நொடி போதும் ....
சிந்திக்குறேன் எபோது சந்திப்போம் என்று ??????

ஏ பெண் மனமே

என்

கவிதையெனும்

சிறுதுளியால்

நான் நிரப்ப நினைக்கிறேன்...

கடலெனும் உன் மனதை...!!!

நாளெல்லாம் தனிமையில்....

நாளெல்லாம் தனிமையில்
நான் இருந்த போது
தலையணையாய்
உன் நினைவுகள்
என் தலைசுமந்தன!

நீ செல்லும் பாதையில்
உன் நிழலைபோல
பின் தொடர்ந்தேன்
ஆனால் இன்று
என்னை இருட்டில் நிறுத்திவிட்டு
நீ மட்டும் வெளிச்சத்தில்... செல்கிறாய்!

யாரிடமும் காட்டாத அன்பு
முதன்முதலாய் உனைபார்த்ததும்
வந்தது
என் சந்தோசத்தின் மறு உருவம் நீ!

நான்கு வார்த்தை அன்பாய் பேச
நாள் முழுக்க சண்டை போட்டேன்..
உன்னிடம்
நாளெல்லாம் உனைநினைத்து ...
காத்திருந்த பொழுதுகள்
எல்லாம் ஏமாற்றமே!

கனமாய் போய்விட்டது மனசு
கணக்கில்லா கண்ணீரால்...
வரிவரியை எழுதிய
என்காதல் வார்த்தைகள் எல்லாம்
கானல் நீராய் போய்விட்டது..

என் நேசத்தில் இருந்து
உன் வசம் தேடிய
என் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
இன்று நீ உதிர்த்த
வார்த்தையால்
செல்லாமல் போய்விட்டது..!

கால் கடுக்க காத்திருப்பேன்
உன் வீடு இருக்கும் வீதியில்
அளவில்லா என் அன்பை
கொண்டு..
உன்னை பார்க்கவேண்டும்
என்று ஆசையோடு!

நான் உன்னை பார்த்தும்
நீயோ எனக்கென்று பேசாமல்
இருப்பாய் வெகு நேரமாகியும்!
அக்கணமே கனமான வலியோடு
என் காலார நடந்து வீடு வந்தடைவேன்!