யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, August 22, 2009

மனித பிறப்பின் தத்துவம்

அன்னையின் அரவணைப்பு

தந்தையின் நல் வளர்ப்பு

அறிவு புகட்ட ஆசிரியர்கள்

நடிக்காத நட்பு

கசக்காத காதல்

கனவு நிறைந்த கல்லூரி வாழ்வு

செல்வம் சேர்க்க நல் வேலை

நிழல் போல வாழ்க்கைத்துணை

வழித்தொடர வாரிசுகள்

பொறுப்பு நிறை குடும்ப வாழ்வு

உண்மையான உறவுகள்

பகை மறந்த பந்தங்கள்

பாசமுள்ள சொந்தங்கள்

மகிழ்ச்சியான முதுமை

மலரும் நினைவுகள்

ிம்மதியான மரணம்..........

இவற்றின் முன் துன்பங்கள் அனைத்தும்

காலைப்பனி போல

உருகும் மெழுகு போல

கரைந்து விடும்......

அதனால் தான் மாண்பு மிக்கது மனித பிறப்பு...

மனித பிறப்பு

கலங்கடிக்கும் இடி மின்னல்,
காட்டாற்றுப்பெருவெள்ளம்


கொடுமை தரும் கொள்ளை நோய்கள்

சுனாமிப்பேரலை,சூறாவெளிக்காற்று


இவை யாவும் இயற்கையின் இயல்புகள்......................


களிக்க முடியாத சாதனைகள்


விலக்க முடியாத சோதனைகள்


தாங்க முடியாத வேதனைகள்


ஜீரணிக்க முடியாத நிந்தனைகள்


பயமுறுத்தும் எதிர்கால சிந்தனைகள்


இவை யாவும் வாழ்வதற்காய் வழங்கப்படும் தண்டனைகள்.............

''இன்னல் நிறைந்தது மனித வாழ்வு'' என்று தெரிந்தும் மனிதனாய்

பிறக்க தவமாய் தவமிருக்கிறது மனம்.............


எதற்காக ?..........

Thursday, August 20, 2009

காதல் கவிதைகள்

பூக்கும் பூக்களில் வாசம் இல்லை!

வீசும் காற்றில் சுவாசம் இல்லை !

உண்ணும் உணவில் சுவைகள் இல்லை !

பார்க்கும் காட்சியில் வண்ணங்கள் இல்லை !

மேகங்கள் இருந்தும் மழை இல்லை !

என்னுள் ஏன் இந்த மாற்றங்கள் என்று

தனியே அமர்ந்து யோசித்தேன்

இவையெல்லாம் ஒன்றாக கிடைத்தது

நீ பார்க்கும் பார்வையில் !

நேசிக்கின்றேன்

கண்களில் வடிகின்ற
என் கண்ணீரை விட
என் நெஞ்சினில் உறைகின்ற
என் குருதியை விட
என்னைவாழவைகின்ற
என் சுவாசத்தை விட
ஏனோ தெரியவில்லை பெண்ணே
இவற்றையெல்லாம் விட
உன்னையே நான் அதிகமாக நேசிக்கின்றேன்

Wednesday, August 19, 2009

இதயத்தில் அவள் பெயர்

சிந்தித்த வேலையெல்லாம்
சிந்தனையில் அவள் உருவம்
எண்ணத்தை மாற்ற என்
இதயத்தில் இடமில்லை
இதயமெல்லாம் அவள்
நினைவை நிரப்பியதால்
சுவாசித்த நேரமெல்லாம்
அவள் பெயரே ஒலித்ததடி

காத்திருக்கும் காதல்

அலைகள் தீண்ட
காத்திருக்கும் கரைகள் போல
வண்டுகள் தீண்ட
காத்திருக்கும் மலர்கள் போல
மேகங்கள் தீண்ட
காத்திருக்கும் நிலவு போல
உன் கண்கள் தீண்டும் வரை
காத்திருக்கும் என் காதல் .....

Tuesday, August 18, 2009

பெண்ணே தெரியுமா......

கவிதைக்குத் தெரியும் என்
காதலின் பாசத்தை
மலருக்கு தெரியும் என்
காதலின் வாசத்தை
இசைக்கு தெரியும் என்
காதலின் ராகத்தை
காற்றுக்கு தெரியும் என்
காதலின் சுவாசத்தை
கடலுக்கு தெரியும் என்
காதலின் ஆழத்தை
உன் மனதுக்கு தெரியும் என்
காதலின் பாதிப்பை ........

என்னவனே

யாருக்காய் திறந்து வைத்திருக்கிறாய்
காதலெனும் மன வாசலை ?
போருக்கு போன உன்னவன
நேருக்கு நேர் வரும்வரையோ ?

காதலியின் முகம்

உன் முகம்

கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................

விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............

நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................

நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................

பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................

விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................

ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.

சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

உண்மையான "நட்பு"

காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது

my dear friends..........................

அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....

பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....

எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"

........இதுவே உண்மையான் "நட்பு"......

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உய்ருள்ள வரை

Friday, August 14, 2009

காதலியின் கடை விழி பார்வை.......

உன் கண்கள் என் மனதை தாக்கும் கனையா....,
என்னை இப்படி சுட்டு விட்டதே......,
சங்கிலியால் கட்டவும் இல்லை....,
என் சட்டையை கிழிக்கவும் இல்லை......,
ஆனால் நான் பைத்தியமானேன் உன் விழியால்........

மழைக்கால காதல்

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முழங்கி தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

மாறிய எழுத்து.........

காதலித்து பார்....கை எழுத்து அழகாகும் என்றார்கள்....
ஆனது என்னமோ உண்மை தான்....ஆனால்
என் தலை எழுத்தும் அல்லவா மாறி விட்டது...

ஆசை........

எனக்கும் ஆசை தான் காதலிக்க....
அது என்னவோ காதலுக்கு வரவில்லை....
என் மீது ஆசை.....!!!

Tuesday, August 11, 2009

நட்பு கவிதை

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

Monday, August 10, 2009

உயிர் நண்பன்

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

Sunday, August 9, 2009

காதலித்துபார்

காதலித்துபார்
வானம் வசப்படும்
பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும்
எந்த இடத்திலும்
காதலியின்
மனம் வசப்படும்
என்று
சொல்லவில்லை

எனக்காக
எதையும்
தியாகம் செய்.
ஆனால்
எதற்காகவும்
என்னை
தியாகம்
செய்துவிடாதே
என்றாய்.
இப்பொழுது
"எதற்காக"
என்னை
தியாகம்
செய்தாய்?

ஒவ்வொரு
முறையும்
உன் வாசலை
கடக்கும்போது
உன்
கொலுசொலி
சொல்லும்
சங்கேதம்
புரிவதில்லை
எனக்கு.

காதலால்
கசிந்துருகி
கால்கடுக்க நின்று
எவ்வளவோ
பேசினாலும்
நீ
பதிலாகத்
தரும்
மௌனத்திற்கு
அர்த்தம்
விளங்குவதில்லை
எனக்கு!
~~~~~~~~~~~~~~~

அம்மா

அன்பு நண்பர்களே:

வீட்டின் உள்ளே பாசமாக
வீட்டின் வெளியே மனசாட்சியாக
படிப்பின் பொது ஆசானாக
செயலுக்கு முன் வழிகாட்டியாக
செயலின் போது நம்பிக்கையாக
செயலுக்குப் பின் கருத்துகளாக
தவறுக்கு பின் கண்டிப்பாக
எதிரிக்கு முன் தைரியமாக
தோல்விக்கு பின் ஆறுதலாக
வெற்றிக்கு பின் பாராட்டுகளாக
எப்போதும் என்முன் கடவுளாக
என் அம்மா!!!

Saturday, August 8, 2009

காதல், காசும் வேண்டுமோ ?????

காற்றில் பறக்கும் உன் கூந்தலை கண்டால்
கடவுளுக்கே காதல் வரலாம் - இந்த
கருவாயன் மட்டும் என்ன விதி விலக்கா ..,,???

உன்மேல் காதல் கொண்டேன்
உயிரை வைத்தேன் ..,
உன்னை ஒத்துக்கொள்ளவும் வைத்தேன் ..,

காதல் என்றேன் கை கொடுதாய்
கல்யாணம் என்றேன்
காற்றுடன் மறைந்தாய்����

காதலுக்கு மட்டும்
கருவாயன் வேண்டுமாம்
கை பிடிக்க கொஞ்சம்
காசும் வேண்டுமோ ?????
_________________
♠♠with love♠♠

வாழ்த்து அட்டை!!!

நாளை பிறக்கப்போகும்
நன்நாளை வாழ்த்திட,
நேற்றே எவனோ
எதையோ எழுதிவிட்டான்..!
அவன் யாரென்றே தெரியாது..
இருப்பினும்.. கச்சிதமாய்
உன் சொந்தங்களை பாடுகிறான்..

அவன் யாரடா உன்
துணைவியை வர்ணிக்க??
அதுவும் உன் திருமண நாளில்!!

ஆனால் நீயோ..
வாழ்த்த கடன்பட்டும்,
வார்த்தைக்கு வக்கில்லாமல்..
நாடிச் செல்கிறாய்
வாழ்த்து அட்டைகளை..!

உன் துணைவியோ.. அந்த
வர்ண அட்டையின்
வசீகர வார்த்தை கண்டு
வகை வகையாய் சிரிக்கிறாள்..
வெட்கத்தில்..!

என்னவோ போ..!

அழ‌கிய‌ ரோஜா

எப்போதும் என்னவள்
உன்னை சூடுவதாலோ ,
என்னவோ..
உனக்கு இத்தனை
அழகு?

************

அழ‌கிய‌ ரோஜாவாக நீ,
ஆனால்
உன்னைச் சுற்றி எப்போதும் ,
குத்தும் முட்க‌ளாய்
உன் அன்ன‌னும், அப்பாவும்!

என் ஆழமான ''நட்ப்பு"

அழகு தேவதை போன்ற உன்னை வரைந்தேன் !
காகிதத்தில் அல்ல,
என் இதயத்தில் !

உன் கண்களில் இருந்து வந்த அம்பு
என் இதயத்தை துளைத்து விட்டது
அதனால்தான்,
என் ஆழமான ''நட்ப்பு'' உனக்கு தெரியாமல் போனது !